28.4 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

மாற்றுத் திறனாளிகளுக்கு ஜூன் 8ஆம் தேதி தடுப்புசி

Selangor Mentri Besar Datuk Seri Amirudin Shari talking to media after witness MOU signing between Open University Malaysia and Biasiswa Wanita Berdaya Selangor (WBS) at Shah Alam yesterday. — KK SHAM/The Star

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் இயக்கம் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
பராமரிப்பு இல்லங்களில் தங்கியிருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள 16 குழுக்களை சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா பணியில் அமர்த்தும்.

மாநிலத்திலுள்ள 69 பராமரிப்பு மையங்களில் உள்ள பணியாளர்கள் உள்ளிட்ட 1,893 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கம் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட மையங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles