
🔊To listen to this news in Tamil, Please select the text.
மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் தங்க கணேசனின் அண்ணன் தங்க ராஜ ரத்தினம் நேற்று புதன் கிழமை காலையில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.
பூச்சோங் வட்டாரத்தில் வசித்த ராஜ ரத்தினம் கட்டுமானத் துறை ஒப்பந்ததாராக நீண்டகாலமால செயல்பட்டு வந்தவர்.
கத்ரி தோட்டத்தில் வாழ்ந்த மக்களைப் பெற்ற மகராசி காமாட்சி தங்கவேலு பெற்ற 12 பிள்ளைகளில் 9-ஆவது பிள்ளைதான் சிவநெறிச் செல்வர் தங்க கணேசன்.
இரண்டாவது பிள்ளையான ராஜரத்தினத்தின் மனைவி சீத்தா தேவி முன்னமே காலமாகிவிட்டார்.
68 வயதான அன்னாருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
சிலாங்கூர், பூச்சோங், 14-ஆவது மைல், கம்போங் பூங்கா மெலோர், 238-ஆம் எண் கொண்ட இல்லத்தில் 7-03-2024 வியாழன் காலை 10:00 மணி அளவில் இறுதி மரியாதை நிகழ்வு நடைபெறும்.
மேல் விவரத்திற்கு 016-6010008( கதிரேஸ்)



