26.4 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

பெண் பணியாளர்களின் பங்களிப்பை  60% உயர்த்த மனிதவள அமைச்சு இலக்கு: ஸ்டீவன் சிம்

🔥 Views : 9
👁 Reading Now : 36

🔊To listen to this news in Tamil, Please select the text.

மடானி பொருளாதாரத் திட்டத்திற்கு ஏற்ப தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்களிப்பை 60 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

தேலண்ட் கோர்ப் மூலம் இந்த இலக்கை மனிதவள அமைச்சு அடையும் என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

இந்த இலக்கு மடானி பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திறமை உத்திகளை மேம்படுத்தை நோக்கமாக கொண்டுள்ளது.

கடந்த 2023/நான்காவது காலாண்டில் பெண்களின் பங்கேற்பு விகிதம் குறைவாகவே உள்ளது.

அக்காலாண்டில்  56.3 சதவீதமாக மட்டுமே இருந்தது. இவ்விவகாரத்தில்வருமான சமத்துவத்தை அடைய பாலின சமத்துவத்தை எட்ட வேண்டும்.

தேலண்ட் கோர்ப்பின்  வனிதா மைவிரா அறிமுக விழாவில் பேசிய ஸ்டீவன் சிம் இவ்வாறு கூறினார்.

இந்த வனிதா மைவீரா திட்டம் தொழிலாளர் இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை அதிகரிக்கும் இலக்கை ஆதரிப்பதுடன் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை  ஊக்குவிக்கும் திட்டங்கள் மேம்படுத்தப்படும்.

இதன் மூலம் நாட்டின் பணியாளர்களை மேம்படுத்துவதற்கு தேலண்ட் கோர்ப் செயல்படும் என்று ஸ்டீவன் சிம் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles