26.4 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

பிரதமர் மித்ராவுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்

🔥 Views : 10
👁 Reading Now : 22

🔊To listen to this news in Tamil, Please select the text.

மித்ராவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும் நிலையில், அதை பிரதமர் துறையின்கீழ் கொண்டு வருவதென மடானி அரசு எடுத்துள்ள முடிவு ஆக்கப்பூர்வமான முடிவென்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தகவல் பிரிவுத் தலைவர் கார்த்திகேசன் சண்முகம் தெரிவித்துள்ளார்.

மித்ராவுக்கு பிரதமரே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அதன் நம்பகத்தன்மை குறித்து பொதுமக்களுக்கு உறுதி அளிக்க வேண்டும் என்றும் மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி இதற்குமுன் பல கட்டங்களில் வலியுறுத்தி இருந்தார்.

இந்திய சமுதாயத்தின் தேவை, அபிலாஷையைப் பூர்த்திசெய்யவும் வெளிப்படைத்தன்மையுடன் பொறுப்பேற்கவும் மித்ராவிற்கு தகுதிவாய்ந்த தலைமைத்துவம் தேவை என்பதை பொன்.வேதமூர்த்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அவரின் கருத்தை வரவேற்கும் அதேவேளை, மித்ராவுக்கு பிரதமர் முழு பொறுப்பேற்பதன் மூலம் ஒரு வலிமையான தலைமைத்துவத்தை உறுதிசெய்ய முடியும்.

அவ்வாறு செய்வதன் மூலம் நாம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி, அதிக உள்ளடக்கத்துடன் செயல்பட முடியும். குறிப்பாக, அனைத்து மலேசியர்களுக்குமான சமதர்ம சமுதாயத்தையும் உருவாக்க முடியும் என்று கார்த்திகேசன் சண்முகம் மேலும் வலியுறுத்தி உள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles