26.4 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

கூட்டுறவு சங்கத்தின் சமூகக் கடப்பாடு தொடரும்-விரியும் ; டத்தோ சகாதேவன்

🔥 Views : 12
👁 Reading Now : 43

🔊To listen to this news in Tamil, Please select the text.

-நக்கீரன்

பெட்டாலிங் ஜெயா, ஏப்.07:
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் சமூகக் கடப்பாடும் பங்களிப்பும் தொடரும் என்று அதன் தலைமை இயக்குநர் டத்தோ பா. சகாதேவன் தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கத்தின் சிலாங்கூர்-விலாயா மாநில வட்டாரக் கூட்டம், ஏப்ரல் 07, ஞாயிற்றுக்கிழமை தோட்ட மாளிகையில் நடைபெற்றது.

மாநிலப் பேராளர்களை தேர்ந்தெடுப்பதற்காக கூட்டுறவு சங்க சிலாங்கூர் மாநில உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் தோட்ட மாளிகைக்கு திரண்டனர்.

கூட்டுறவு சங்க செயலாளருமான சகாதேவன், தலைமை நிருவாகி டத்தோ கிளி ரத்தின ராஜ் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பேராளர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

ஏறக்குறைய 60ஆயிரம் உறுப்பினர்கள் பதிவு பெற்றுள்ள கூட்டுறவு சங்கத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் சுமார்15ஆயிரம் பேர் அங்கத்தினர்களாக உள்ளனர்.

இன்றைய தேர்தலில் 1,517 அங்கத்தினர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த டத்தோ சகாதேவன், கூட்டுறவு சங்கத்தின் சமூக நல உதவிகளும் கூட்டுறவு சங்க அங்கத்தினர்களின் பிள்ளைகளுக்கான கல்வி நிதி உதவியும் தொடரும் அதேவேளை உறுப்பினர்களுக்கான சமூக நலத் திட்டங்களும் தொடரும் என்றார்.

டான்ஸ்ரீ மாரிமுத்து உள்ளிட்டோருடன் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களும் இதில் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles