
🔊To listen to this news in Tamil, Please select the text.
நேசா கூட்டுறவு சங்கம் 50-ஆம் ஆண்டில் பயணிக்கிறது என்று அதன் தலைவர் டத்தோ சசிகுமார் தேரிவித்தார்.
நேசா கூட்டுறவு சங்கத்தின் வட்டாரக் கூட்டங்கள் ஜோகூர், மலாக்கா, நெகிரி, சிலாங்கூர், பேராக் மாநிலங்களில் முடிந்துவிட்ட நிலையில் இப்பொழுது கடைசியாக விலாயா மாநிலத்திற்கு நடைபெறுகிறது என்று கூட்டம் நடைபெற்ற பிரிக்ஃபீல்ட்ஸ் விவேகானந்தர் தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதி டத்தோ சசிகுமார் தெரிவித்தார்.
இதற்கிடையில், கெடா மாநிலக் கூட்டமும் பினாங்கு மாநிலக் கூட்டமும் ஒன்றாக நடைபெற்றதாக சசிகுமார் சொன்னார்.

நேசா கூட்டுறவு கழகத்தின் சார்பில் அதிகமான வீட்டுடைமைத் திட்டங்கள் மேற்கொள்ளப் படுவதாகவும் இதில் பங்குபெறும் நேசா அங்கத்தினர்களுக்கு முத்திரைக் கட்டணத்தை(Stamp Duty) நேசா கூட்டுறவுக் கழகமே வழங்கும் என்றும் தெரிவித்த டத்தோ சசி, உறுப்பினர்களின் கல்வி நலனிலும் அக்கறைக் காட்டி வருவதாக சொன்னார்.
எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம். மாணவர்களைப்போல உள்நாட்டில் உயர்க்கல்வி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு தொடக்க நிதியையும் அளிக்கிறது.
நேசா கூட்டுறவு சங்கம் பொன்விழா ஆண்டை எட்டியதை முன்னிட்டு இன்றைய கூட்டத்தில் மூத்த அங்கத்தினர்கள் ஐவருக்கு சிறப்பு செய்யப்பட்டதாக மேலும் சொன்னார்.
விலாயா மாநிலக் கூட்டம் சுமூகமாக நடைபெற துணைநின்ற உறுப்பினர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் டத்தோ சசிகுமார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
