26.4 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

இன்றைய முழு சூரிய கிரகணம் மலேசியாவில் பிரதிபலிக்கவில்லை – இந்து சங்கம் அறிவிப்பு

🔥 Views : 8
👁 Reading Now : 65

🔊To listen to this news in Tamil, Please select the text.

இன்று ஏப்ரல் 8-ஆம் நாள் வானத்தில் தோன்றும் சூரிய கிரகணத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. நான்கு நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் இந்தக் கிரகணம் ஆசிய நாடுகள் தவிர, வளைகுடா மண்டலம் வரை உள்ள மக்கள் காணமுடியாது.

மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் மட்டுமே அதுவும் முழு கிரகணமாக தோன்றும்.

மலேசியாவில் இந்தக் கிரகணம் தோன்றாது என்பதால், இங்கு நட்சத்திர, தோச பலன்களைக் கணிப்பதும் கூறுவதும் பொருத்தமாக இருக்காது. அதனால் இந்தக் கிரகணம் தோன்றும் நேரத்தில் மலேசியாவில் வாழும் இந்திய-இந்து சமுதாய குடும்பங்களில் எந்த பரிகாரமும் மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் கர்ப்பினிப் பெண்கள் உட்பட எவரும் அச்சம் கொள்வது, வெளியில் வரத் தயங்குவது உட்பட எந்த வகையிலும் கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் இதன் தொடர்பில் மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ஶ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles