
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெட்டலிங் ஜெயா, மே 01:
அனைத்து தொழிலாளர் மத்தியிலும் சமய நல்லிணக்கம் மேலும் தழைக்க மலேசிய இந்து சங்கம் வாழ்த்துகிறது என்று அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் வெளியிட்ட மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நாடு இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது என்றால், தலைவர்களின் பங்களிப்பு அதிகம் என்றாலும் உழைப்பாளிகள் சிந்திய வியர்வையும் தந்த உழைப்பும்-தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. இளைஞர்கள் முதல் பெரியவர்கள்வரை இனம்-மொழி-சமயம் கடந்து அனைவரும் ஏதோவொரு வகையில் உழைப்-பாளிகளாத்தான் விளங்குகிறோம். தொழிலாளர்களிடையே, சமய நல்லிணக்கம் இன்னும் மேலோங்கினால், அது மலேசிய பல்லின சமுதாயத்தின் ஒருமைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும்.
சமயப் பயிர் வளர்ப்பதற்காக தற்பொழுது நாட்டில் இருக்கின்ற அத்தனை வழிபாட்டுத் தலங்களும் தொழிலாளர்தம் உழைப்பினால் உருவானவை.
இன்று தொழில்வள நாடாகாவும் பன்முனை தகவல் தொழில்நுட்பம் சார்ந்து பன்னாட்டு கல்வி முனையமாகவும் மிளிரும் மலேசியா, தொடக்கத்தில் விவசாய நாடாகவும் அதற்குமுன் இயற்கை கனிம வள நாடாகவும் இருந்தது.
போக்குவரத்து கட்டமைப்பெல்லாம் மேம்படாத அந்நாட்களில் தொழிலாளர்-கள் வழங்கிய அயராத உழைப்பினால்தான் நாடு பொருள் வளம் பெற்று முன்னேறியது. குறிப்பாக, இந்திய சமுதாயத்தினர் அனைவருமே பாட்டாளிகளாகத்தான் விளங்கினர்.
அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய துணைபுரியம்படி எல்லாம்வல்ல பரம்பொருளைப் பணிவதாக ஸ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசன் தன் மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன்
தேசியத் தலைவர்



