
🔊To listen to this news in Tamil, Please select the text.
பேராக் மாநிலத்தில் இந்து சமயத் தொண்டராக நீண்ட காலம் செயல்பட்ட திருமிகு கணேசுவரன் முனியாண்டி காலமானதை அறிந்து மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் தேசிய செயலாளர் க. மாணிக்கவாசகம் தெரிவித்துள்ளார்.
மலேசிய இராணுவத்தில் லெப்டினண்ட் கமாண்டோ பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றபின், பொது நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அலங்கரிப்பு செய்யும் நிறுவனத்தை நடத்தி தொழில்முனைவராக விளங்கிய மு.கணேசுவரன், தன் மகன்களையும் அதில் ஈடுபடுத்தி, குடும்பத் தொழிலாக அதை நடத்தி வந்தார்.
மலேசிய இந்து சங்க தேசிய துணைப் பொருளாளரும் பேராக் மாநிலப் பேரவையின் பொருளாளருமான ‘சங்கபூசன்’ மு. பாலகிருஷ்ணனின் தம்பியுமான 63வயது கணேசுவரன் இருதயக் கோளாறு காரணமாக கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்ற்று வியாழன் காலையில் அவர் சிவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆன்மா, சிவபதம் அடைய அவனடியைப் பணிவதாக க.மாணிக்கவாசகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஓம் நவச்சிவாய ஓம்
