
சேவையிலிருந்து முழுமையாக நிறுத்தப்பட்ட 8 பினாங்கு பெரிகளின் நிலை எந்த அளவில் உள்ளது என்பதை எஸ்பிபிபி எனப்படும் பினாங்கு துறைமுக வாரியம் விளக்கம் தர வேண்டுமென பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முஹைதீன் அப்துல் காதிர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சேவையை நிறுத்தப்பட்டப் பின்னர் அவை யாவும் கவனிக்கப்படாமல் போனதால்,இன்று நீரில் முழுகும் நிலைக்கு வந்துள்ளது என்றார்.பினாங்கு மாநிலத்தில் வரலாற்றைக் கூறும் பெரியின் இன்றைய நிலையைக் கண்டு வெட்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
வேறு நல்ல நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படாத நிலையில்,இப்போது அவற்றின் நிலை எந்த அளவில் உள்ளது என்பதை,பினாங்கு துறைமுக வாரியம் நியாயமான விசாரணையை நடத்தி,உண்மை நிலவரத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும்
