28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சின்னம் பற்றி விவாதிக்கும் நேரம் இதுவல்ல

🔥 Views : 10
👁 Reading Now : 52

கோவிட் -19 தொற்றுநோயைச் சமாளிக்க, நாடு இன்னமும் சிரமப்பட்டு வரும் இந்த நேரத்தில், 15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் எந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவது என்பது குறித்து விவாதிக்க இது சரியான நேரம் அல்ல என்று டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், பிஎச் அமர்வின் போது இந்த விவகாரம் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு உறுப்புக் கட்சியும் இது குறித்து “பொது புரிதலை” அடைந்துள்ளனர்.

“எந்தவொரு தரப்பினரும் இந்த விஷயத்தை வெளிப்படையாக எழுப்பி, ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டிய அவசியமில்லை. தேர்தல் உத்தி மற்றும் அதிக வெற்றி வாய்ப்பைக் கொண்டுள்ள சின்னம் எது என்றக் கேள்விகளைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

“நேரம் வரும்போது, ​​பிஎச் தலைமை மன்றம் இந்த விஷயத்தில் ஒரு கூட்டு முடிவை எடுக்கும என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles