28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

மக்கள் நீண்ட காலமாக அவதிப்படுகிறார்கள்!

🔥 Views : 11
👁 Reading Now : 51

தொற்றுநோய் வேகமாக பரவி வருவதால், கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்தை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். புத்ராஜெயா தடுப்பூசிகளை பெற விரும்புவோர் மீது கவனம் செலுத்த வேண்டும், தடுப்பூசிகளைப் பெற பதிவு செய்துள்ளவர்கள் கூடிய விரைவில் அதனை பெறுவதை உறுதி செய்யவேண்டும்.
“நீங்கள் தடுப்பூசிகளை ஆர்டர் செய்வதில் மெதுவாக செயல் படுகிறீர்கள். மக்கள் நீண்ட காலமாக அவதிப்படுகிறார்கள், அதிகமான இறப்புகள் ஏற்பட்டுள்ளன. தடுப்பூசிகளுக்கு எதிரான குரல் சிறியது அதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை விட்டு, அரசாங்கம், பெரும்பாலானவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
கோவிட் -19 தடுப்பூசியை தாங்களே வாங்கும் திறன் கொண்ட எந்தவொரு நிறுவனத்திற்கும் அதற்கான அனுமதியை வழங்குமாறு அன்வார் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles