31.1 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

தினசரி லட்சம் பேருக்கு தடுப்பூசியை போடுங்கள்!பத்து காஜா எம்.பி. சிவகுமார் கோரிக்கை

🔥 Views : 31
👁 Reading Now : 49

நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் கோரிக்கை முன்வைத்துள்ளார். தற்போது நாளொன்றுக்கு 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.
இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி நோய்த் தொற்றில் இருந்து மக்களை விரைந்து காப்பாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தற்போது தினசரி நோய்த்தொற்று தாக்கத்தினால் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், மரண எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமானால் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles