
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டில் சமூக ஊடகங்களினால் இந்திய மாணவர்களின் கல்வி பெரிய அளவில் பாதிப்படைந்து வருகிறது. ம இ கா தேசிய மகளிர் பிரிவின் தலைவரும் கெமேலே சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு சரஸ்வதி நல்லதம்பி இதனை தெரிவித்தார். இணையப் பகடிவதைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். ஈஷா என்ற ராஜேஸ்வரியின் தற்கொலையைப் போல் இன்னொரு சம்பவம் நம் நாட்டில் நிகழக்கூடாது. அதே நேரத்தில் இணையப் பகடிவதைக்கு கடுமையான தண்டனை விதிக்க கோரி மேலவையில் செனட்டர் டத்தோ நெல்சன் அவர்களை வலியுறுத்துமாறு ம இ கா மகளிர் அணி மகஜரை வழங்கும் என்று அவர் கூறினார். மேலும் தற்போது நாட்டில் சமூக ஊடகங்களால் குறிப்பாக டிக் டாக்கால் இந்திய மாணவர்களின் கல்வி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இது பெரும் வேதனையை அளிக்கிறது என்று இன்று ம இ கா மகளிர் அணியின் உச்சமன்ற கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் சரஸ்வதி நல்லதம்பி தெரிவித்தார். இதனிடையே மா ஈ கா தேசிய மகளிர் அணி சமூகப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நியமனம் செய்யப்பட்ட மாநில ம இ கா மகளிர் அணியின் பொறுப்பாளர்கள் தத்தம் கடமைகளை சரிவர செய்வார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
