
🔊To listen to this news in Tamil, Please select the text.
ம.இ.கா-விலிருந்து விலகிய செனட்டர் சிவராஜ் உட்பட யாராக இருந்தாலும் மீண்டும் சேர விரும்பினால் கட்சி வரவேற்கும் என அதன் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவிதுள்ளார். அண்மையில் கட்சியிலிருந்து விலகிய அவுத்தார் சிங் மீண்டும் கட்சியில் இணைய விண்ணப்பம் செய்ததற்கு மத்திய செயலவை இணக்கம் தெரிவித்துள்ளது பற்றிக் கருத்துரைத்த போது அவர் இவ்வாறு கூறினார்.
இதனிடையே ம.இ.கா வின் தேசிய பேராளர் மாநாடு வருகின்ற 15 செப்டம்பரில் ஷா ஆலாம் IDCC மண்டபத்தில் நடைப்பெறும் என்று விக்னேஸ்வரன் இன்றைய மத்திய செயலவை கூட்டத்திற்கு பின்பு அறிவித்தார்.
அடுத்த தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் வியூகங்களை வரைய விரைவில் Retreat எனப்படும் கருத்துப் பரிமாற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.



