29 C
Kuala Lumpur
Tuesday, June 30, 2026

Vetri

நாட்டிற்கு பெருமைச் சேர்ந்த கராத்தே வீரர்களை உருவாக்கிய சிகாம்பூட் ஸ்ரீ சினார் மண்டபத்தை உடைப்பதா? – தி.மோகன் குமுறல்

🔥 Views : 13
👁 Reading Now : 34

🔊To listen to this news in Tamil, Please select the text.

சிகாம்புட், ஸ்ரீ சினாரில் Hayashi Ha கராத்தே கழகம் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சமூக மண்டபத்தின்
முன்பகுதி நேற்று இடிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் இடிப்பாட்டை தடுத்து நிறுத்தவும் நூற்றுக்கணக்கான பேர் இன்று அந்த கட்டிடத்தின் முன்னிலையில் கூடிய நிலையில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தினர் கட்டிடத்தின் முன்பகுதியை மட்டும் இடித்துவிட்டு அங்கிருந்து காலி செய்ய 1 மாதம் கால அவகாசத்தை வழங்கிச் சென்றுள்ளனர்.

கூட்டரசு பிரதேச நிலம் மற்றும் கனிம அலுவலகத்திற்குச் சொந்தமான நிலத்தில் அமையப் பெற்ற அம்மண்டபத்தில், கடந்த 30 ஆண்டுகளாக Hayashi Ha கராத்தே கழகம் காரத்தே பயிற்சிகளை நடத்தி வருகிறது.

இந்த கழகத்தின் கீழ் பயின்வர்கள், இந்த இடத்தில் பயிற்சி எடுத்தவர்கள் என பல வீரர் வீராங்கனைகள் நாட்டிற்கு பதக்கங்களைக் குவித்துள்ளனர்.

அவர்களில் கராத்தே பயிற்றுனர் பொன்னையாவின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் ஆசிய விளையாட்டில் 2 முறை தங்கம் வென்றவரான புவனேஸ்வரன் ஆகியோரும் அடங்குவர்.

இப்படி பல சாதனையாளர்களை உருவாக்கிய இந்த கட்டிடத்தை உடைப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார் Hayashi Ha கராத்தே கழகத்தின் தலைவர் டத்தோ T.மோகன்.

அதோடு, இந்த கட்டிடத்தில் என்ன சட்டவிரோத நடவடிக்கைகளா மேற்கொள்ளப்பட்டு வந்தன? அங்குள்ள பெரும்பாலானோருக்கு ஓய்விடப் பகுதியாகவும், முதியவர்கள் நடைப்பயிற்சியின்போது கழிப்பிட வசதி என அனைவருக்கும் பயனான ஒரு இடமாகவே இவ்விடம் இருந்திருந்தது. இதை எப்படி அவர்கள் உடைக்க முடியும்?
அப்படியே உடைத்துதான் ஆகவேண்டும் என்றால், பல சாதனையாளர்களை உருவாக்கியுள்ள இவ்விடத்திற்கு மாற்று இடம் கொடுத்திருக்கலாமே என மோகன் கூறியுள்ளார்.

சுற்று வட்டார மக்களின் நன்கொடையால் கட்டப்பட்ட இந்த கட்டிடம், ருக்கூன் தெத்தாங்கா கட்டிடத்தின் பின்புறத்தில் அமைந்துள்ளது.

கடந்த 6 மாதங்களாக திடீரென இந்த மண்டபத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டிருப்பதோடு, இது குறித்துக் கலந்துரையாடல்கள் நடைபெற்ற வந்த நிலையில் இன்று உடைப்பாடு வேலைகள் அறிவிப்பின்றி திடீரென நடத்தப்பட்டன.

இதனிடையே, இன்றைய சம்பவத்திற்குப் பிறகு, தங்களது அடுத்த கட்ட நடவடிக்கையாக
சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினரும், இளைஞர் மட்டும் விளையாட்டுத் துறை அமைச்சருமான Hannah Yeoh மற்றும் நாட்டின் மாட்சிமை தங்கிய மாமன்னருக்கும் மகஜர் வழங்கவுள்ளதாக மோகன் தெரிவித்தார்.

இதனிடையே, இது குறித்து சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் தனது முகநூல் பதிவில், அவரின் தரப்பு கருத்தையும் பதிவிட்டுள்ளார்.

இவ்விவகாரம் இனமோ, விளையாட்டோ சம்பந்தப்பட்டது அல்ல. நிலத்தை மீட்க அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இதைப் பார்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலத்தை மீட்க கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகள், கடந்த ஒரு வருடமாக முயன்று வருகின்றனர்.

பல அறிவிப்புகள் அனுப்பப்பட்ட நிலையில், அவை புறக்கணிக்கப்பட்டு, சட்டவிரோதமாக மேலும் விரிவுபடுத்தும் முயற்சியில் அங்குள்ளவர்கள் ஈடுபட்டனர் என்று பதிவிட்டு இருக்கிறார் ஹன்னா இயோ.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles