
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிகாம்புட்டில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடம்தான் இடிக்கப்பட்டது.
இதை இனம் அல்லது விளையாட்டுத் துறை பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என்று இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.
சிகாம்புட்டில் கராத்தே பயிற்சி மையம் இடிக்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையாகி வருகிறது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதில் சட்டவிரோத கட்டடங்களை இடிக்கும் முயற்சிக்கு ஒரு கூட்டம் எதிர்ப்புத் தெரிவித்தது.
குறிப்பாக கராத்தே பயிற்சி மையமாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, என்னை இந்த விவகாரத்தில் தலையிட அழைப்பு விடுத்துள்ளனர்.
உண்மையில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களைத்தான் இடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆகையால், இதை இனம் அல்லது விளையாட்டுப் பிரச்சினையாக பொதுமக்கள் மாற்ற வேண்டாம்.
ஏறக்குறைய ஒரு வருடமாக மண்டபத்தின் நிர்வாகத்தை மீட்டெடுக்க கோலாலம்பூர் மாநகர் மன்றம் முயற்சித்து வருகிறது.
இது, கோலாலம்பூர் முழுவதும் சமூகக் மண்டபங்கள் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் அணுகக்கூடியதாக இருப்பதையும், எந்த ஒரு தரப்பினராலும் உரிமை பெறாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.
ஆனால், இந்த முயற்சிகளுக்கு புரிந்துகொள்ளாதவர்களால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பிடிஜிடபள்யூ, மாநகர் மன்றம் ஆகியவை வளாகத்தை காலி செய்ய அவர்களுக்கு பல முறை அறிவிப்புகள் வழங்கப்பட்டன.
ஆனால் அவை புறக்கணிக்கப்பட்டதாக ஹன்னா இயோ கூறினார்.
ஆகையால் இது இனம் அல்லது விளையாட்டு தொடர்பான பிரச்சினை அல்ல என்று அவர் கூறினார்.

30 years building how come can said it’s Illegal ? Why this government madani cannot approved for the committee why can’t do that because TAMILAR of right ! Went voting come to visit home by home that time only open mind that time only promised anak melayu anak saya , anak india anak saya , anak cina anak kita what is this cheating Indian committee right I said SURE THE GOD WILL PUNISHMENT FOR THIS MALAYSIA WAIT AND SEE AS SOON AS POSSIBLE .