
🔊To listen to this news in Tamil, Please select the text.
கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த ஒலிம்பிக் திருவிழா இன்றுடன் முடிவடைந்தது. இதில் 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
சீனா 91 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் ஜப்பான் மூன்றாவது இடத்திலும் ஆஸ்திரேலியா 4ஆவதாகவும் உபசரனை நாடான பிரான்ஸ் 5ஆவதாகவும் பதக்கப் பட்டியலில் உள்ளன.
கடந்த ஜூலை 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய இந்த விழாவில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 16 நாட்கள் நடைபெற்ற இந்த விழா நடைபெற்றது.
மலேசியா 2 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 80ஆவது இடத்தில் உள்ளது.
மொத்தம் ஆறு பதக்கங்களுடன் இந்தியா 71-வது இடம் பிடித்துள்ளது.
ஈட்டி எறிதலில் அர்ஷத் நதீம் வென்ற தங்கப் பதக்கத்துடன் பாகிஸ்தான் 62-வது இடத்தில் உள்ளது.
