29 C
Kuala Lumpur
Tuesday, June 30, 2026

Vetri

மலேசிய நகரத்தார் வர்த்தக சம்மேளனத்தின் வர்த்தக தொழில் கருத்தரங்கு

🔥 Views : 14
👁 Reading Now : 41

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசிய நகரத்தார் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர். இராமநாதன் தலைமையில் காமன்வெல்த் கிளப் மண்டபத்தில் வர்த்தக தொழில் துறை கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது.

மலேசிய நகரத்தார் வர்த்தக சம்மேளனத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.

மலேசிய நகரத்தார் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர். இராமநாதன் தமது வரவேற்புரையில் இதுபோன்ற வர்த்தக கருத்தரங்குகள் வளர்ந்து வரும் இளம் வர்த்தகர்களுக்கு பயன் அளிக்கும் என்றார்.

திட்டமிட்டு சரியான பாதையில் வர்த்தகத்தை தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்று அவர் சொன்னார்.

வர்த்தக தொழில் துறை தன்முனைப்பாளர் ஜீவன் சகாதேவன் இந்த வர்த்தக கருத்தரங்கை சிறந்த முறையில் வழிநடத்தினார்.

பல வர்த்தக தொழில் துறைகளில் நம்மவர்கள் தொழில் செய்வதற்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன.

இருப்பினும் திட்டமிடல் மற்றும் எந்தெந்த தொழில் துறையில் ஈடுபடலாம் என்பது குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

சிறப்பான முறையில் வர்த்தக தொழில் கருத்தரங்கை ஏற்பாடு செய்த மலேசிய நகரத்தார் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோ இராமநாதனை
லோட்டஸ் தண்ணீர் மலை செட்டியார் வெகுவாக பாராட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles