29 C
Kuala Lumpur
Tuesday, June 30, 2026

Vetri

சிகாம்புட் கராத்தே பயிற்சி மைய பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

🔥 Views : 11
👁 Reading Now : 63

🔊To listen to this news in Tamil, Please select the text.

கராத்தே பயிற்சி மைய பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்பட வேண்டும்.

நீலாய் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

நாட்டில் கராத்தே விளையாட்டின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் மாஸ்டர் பொன்னையாவின் குடும்பத்தினர் மிகப் பெரிய பங்கை ஆற்றியுள்ளனர்.

குறிப்பாக நாட்டிற்கு அதிகமான பதக்கங்களை பெற்று தந்து பெருமை சேர்ந்துள்ளனர்.

ஆனால் மாஸ்டர் பொன்னையா, மாஸ்டர் தென்னவன் தலைமையில் செயல்பட்டு வந்த சிகாம்புட் கராத்தே பயிற்சி மையம் அண்மையில் உடைக்கப்பட்டது.

குறிப்பாக இதுவொரு சட்டவிரோத இடம், அங்கு பயிற்சி வழங்குவது எனக்கு தெரியாது என இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறியுள்ளது வருத்தத்தை அளிக்கிறது.

கராத்தே விளையாட்டில் பல சாதனைகளை படைத்த மாஸ்டர் பொன்னையாவின் குடும்பத்தினருக்கு அரசாங்கம் உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.

அதை விடுத்து அவர்களை வீதியில் இறங்கி போராட விட்டது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

ஆகவே அமைச்சரும் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹன்னா இயோ சுமூக தீர்வை வழங்க வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles