
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர் ருத்ராதேவி சமாஜ்ஜில் ஆடி மாத பூஜையும் ரத ஊர்வலமும் சிறப்பான முறையில் நடைபெற்றது. ருத்ராதேவி சமாஜ் கடந்த 1988 இல் நிறுவப்பட்டது. கோலாலம்பூர் காசிப்பிள்ளையில் இந்த சமாஜ் அமைந்துள்ளது. இளைஞர்களிடையே இந்து மதத்தைப் பரப்புவதே ருத்ராதேவி சமாஜ்ஜின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது என்று அதன் தலைவர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் கூறினார்.

ருத்ராதேவி சமாஜ்ஜில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத பூஜையுடன் ரத ஊர்வலம் நடத்தப்படும். அவ்வகையில் இவ்வாண்டுக்கான இந்நிகழ்வு நேற்றுமுன்தினம் விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பின் காசிபிள்ளை சுற்றுவட்டாரத்தில் அம்பாள் ஊர்வலமாக வந்தார். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த ரத ஊர்வலத்திக் கலந்து கொண்டனர் என்று டாக்டர் குணராஜ் கூறினார்.



