
🔊To listen to this news in Tamil, Please select the text.
கடந்த ஜூலை 11ஆம் தேதி மாஜு எக்ஸ்பிரஸ்வே அருகே உள்ள டோல் சாவடியில் வெளிநாட்டு ஜோடியைக் கடத்திய விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் 10 பேரை கைது செய்தனர்.
சிலாங்கூர் மாநில காவல்துறை தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் இதனை உறுதிப்படுத்தினார். அவர்களிடமிருந்து 1.5 மில்லியன் ரிங்கிட் நிதி, ஆடம்பர கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சீன நாட்டவர் ஒருவரும் உள்ளூர் பெண்ணும் ஜூலை 15ஆம் தேதி பெடாஸ் லிங்கி சாலையோரத்தில் விடுவிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட சீன நாட்டவரின் தம்பி கடத்தல்காரர்களுக்கு 5 மில்லியன் தொகையைச் செலுத்தியுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார். கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அனைவரும் உள்ளூர் நாட்டவர்கள் என்று தெரிய வந்தது.



