
🔊To listen to this news in Tamil, Please select the text.
கிள்ளான் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட உடல் நிட்ஷா அஃப்ஹாம் மொக்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.
சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.
கிள்ளான் ஆற்றில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இது காணாமல் போனதாகக் கூறப்படும் 23 வயதான பாடகரும், யூடியூபருமான நிட்ஷா அஃப்ஹாம் மொக்தார் என்பதை போலிசார் உறுதிப்படுத்தினர்.
மேலும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக
கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
முன்னதாக, சிலாங்கூரில் உள்ள மலேசிய தீயணைப்பு மீட்புத் துறை இங்குள்ள கிள்ளான் ஆற்றுப் பாலத்தின் அருகே ஒரு இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.
அந்த ஆணின் உடலில் 56 எண் கொண்ட ஆடை இருந்தது என்று அவர் கூறினார்
