30.2 C
Kuala Lumpur
Thursday, July 10, 2025

Vetri

மூவாரில் தேவாலய குளியல் அறையில் சிறுமி குளித்ததை வீடியோவில் பதிவு செய்த குற்றத்தை மருத்துவ மாணவன் ஒப்புதல்

🔊To listen to this news in Tamil, Please select the text.

தேவாலயத்தின் குளியல் அறையில் ஒரு சிறுமி குளித்துக்கொண்டிருந்ததை வீடியோவில் பதிவு செய்த குற்றத்தை கோலாலம்பூரிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவன் ஒப்புக் கொண்டான். இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டபோது 20 வயதுடைய டெஸ்மோன்ட் டான் சீ யோங் ( Desmond Tan Chee Yong) என்ற அந்த மாணவன் நீதிபதி அபு பாக்கார் (Abu Bakar) முன்னிலையில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டான் . இதனைத் தொடர்ந்து டெஸ்மோனுக்கு 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதோடு அதனை செலுத்தத் தவறினால் மூன்று மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்கும்படி நீதிபதி அபு பாக்கார் உத்தரவிட்டார்.

மேலும் தாம் பதிவு செய்த அனைத்து வீடியோ மற்றும் படங்களையும் அழித்துவிட வேண்டும் என்பதோடு பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மன்னிப்பு கேட்கும்படி அவனுக்கு நீதிபதி உத்தரவிட்டார். கடந்த ஜூன் மாதம் இரவு 9 மணியளவில் Sialin வர்த்தக மையத்திலுள்ள தேவாலயத்தில் சிறுமியின் ஆபாசப் நிர்வாணப் படங்களை வைத்திருந்தாக டெஸ்மோன்ட் மீது குற்றஞ்சாட்டப்பட்டது . இதனிடையே ஆபாசப் படங்களை வைத்திருந்தாக அந்த இளைஞன் மீது தண்டனைச் சட்டத்தின் 292ஆவது விதியின் கீழ் மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டையும் அவன் ஒப்புக்கொண்டதால் ஆகஸ்ட்டு 27 ஆம்தேதி இந்த குற்றச்சாட்டு மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles