30.1 C
Kuala Lumpur
Monday, August 10, 2026

Vetri

விக்டோரியா தோட்ட ஸ்ரீ துரெளபதையம்மன் ஆலயத்தில் புதிய தமிழ் பாலர் பள்ளி!

🔥 Views : 29
👁 Reading Now : 38

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் நிபோங் திபால்
விக்டோரியா தோட்ட ஸ்ரீ துரெளபதையம்மன் ஆலயத்தில் புதிய
பாலர் பள்ளியை கட்டியுள்ளது. நமது இந்தியப் பிள்ளைகளின் கல்வி எந்நிலையிலும் ஒருபோதும்
பாதிக்கக்கூடாது என்பதற்காக பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்த புதிய தமிழ்ப் பாலர் பள்ளியை கட்டியிருப்பதாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி தெரிவித்தார்.


நான்கு வயது மாணவர்கள் பாலர்பள்ளியில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில்,பினாங்கு இந்து அறப்பணி வாரியம் நிபோங் திபால் விக்டோரியா தோட்ட ஸ்ரீ துரெளபதையம்மன் ஆலயத்தில் புதிய
பாலர் பள்ளி ஒன்றை அமைத்துள்ளது.
70 மாணவர்கள் அமர்ந்து படிக்கக்கூடிய வசதிக்கு கொண்ட இந்த பாலர் பள்ளி ஒரு லட்சம் வெள்ளியில் கட்டப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இன்று இந்த பலர் பள்ளிக்கு வருகை புரிந்த டாக்டர் ராமசாமி கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
இவருடன் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக
இயக்குனர் டத்தோ எம்.இராமச்சந்திரன், பாகான் டாலாம் சட்டமன்ற
உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, செபெராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர்
டேவிட் மார்ஷெல் ஆகியோரும் உடனிருந்து பள்ளியை பார்வையிட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles