25.3 C
Kuala Lumpur
Sunday, April 19, 2026

Vetri

உலு சிலாங்குரில் இலவச கோவிட் பரிசோதனை; எழுவருக்கு நோய் தொற்று உறுதி!

உலு சிலாங்குர் நாடாளுமன்ற தொகுதியில் நடத்தப்பட்ட சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் இலவச கோவிட் பரிசோதனையில் 7 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த 7 பேரும் உடனடியாக மலேசிய கோவிட் மருத்துவ பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுவர் என்று உலு சிலாங்குர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். நேற்று காலை 8 மணி தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த இலவச கோவிட் பரிசோதனையில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கெடுத்தனர் அதில் ஏழு பேர் கோவிட் தொற்று கிருமி பாதிக்கப்பட்டுள்மை தெரிய வந்துள்ளது. இந்த பரிசோதனையின் முடிவு 3 மணி நேரத்தில் வெளி வந்தது. அதனடிப்படையில் அந்த 7 பேரும் உடனடியாக கோவிட் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டுசெல்லப்படும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் ஜூன் லியாவ் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles