
சிலாங்கூர் மாநில மக்களுக்காக இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்ட கோவிட் 19 பரிசோதனையில் இந்தியர்களின் பங்கேற்பு வருத்தமளிக்கிறது. அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இலவச கோவிட் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று உ லு சிலாங்கூர் நாடாளுமன்ற மன்றம் தொகுதிக்கு உட்பட்ட பத்தாங் காலியில் இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்ற இந்த பரிசோதனையில் இந்தியர்களின் பங்கேற்பு மிக மிக குறைவாக இருந்தது வேதனை அளிக்கிறது என்று அந்த தொகுதியின் இந்திய பிரிவு கிராம தலைவர் ராஜன் மற்றும் உ லு சிலாங்கூர் ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள் கனகராஜ், மரியா ஆகியோர் தெரிவித்தனர்.
நாளை ஜூன் 8ஆம் தேதி உ லு சிலாங்கூர் தொகுதியில் உ லு பெர்னாம், கோலகுபு பாரு பகுதிகளில் இந்த இலவச பரிசோதனை நடத்தப்படும். இதில் அதிகமான மக்கள் கலந்து கொள்ளும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
