
🔊To listen to this news in Tamil, Please select the text.
சாலை தடுப்பு சரிந்து விழுந்ததில் சேதமடைந்துள்ள 80 மீட்டர் நீளமுள்ள ஜாலான் பகான் பாசிர், தஞ்சோங் காராங் சாலையை பழுது பார்க்கும் பணிகள் அடுத்த வாரம் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘‘இன்னும் ஒரு வாரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக அப் பகுதியைப் பயன்படுத்த முடியும்’’ என நேற்று சாலை பழுதுபார்ப்பு பணியை ஆய்வு செய்த பின்னர் உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் கூறினார்.
ஆற்றின் பலமான நீரோட்டம் காரணமாக சாலை தடுப்பு இடிந்து வீழ்ந்ததன் விளைவாக சாலையில் விரிசல் ஏற்பட்டது என அவர் விளக்கமளித்தார்.
“இந்த சாலையை பழுதுபார்க்கும் முறையும் சற்று மாறுபட்டது. ஏனென்றால் கீழே உள்ள தரை மிகவும் மென்மையானது. இந்த பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ளும் பொறுப்பு இன்ஃப்ராசெல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.



