
🔊To listen to this news in Tamil, Please select the text.
புக்கிட் ஜாலில் திஜிவி திரையரங்கில் திரண்டிருந்த மலேசிய தளபதி ரசிகர்களை கண்டு நான் ஆடிப் போனேன்.
தளபதியை போன்று ரசிகர்கள் நமது நாட்டுக் கலைஞர் இர்பானையும் கொண்டாட வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஜி (டிஎஸ்ஜி) கூறினார்.
தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைபடத்தின் சிறப்பு காட்சி புக்கிட் ஜாலில் டிஜிவி திரையரங்கில் திரையிடப்பட்டது.
மலேசிய விஜய் ரசிகர் மன்றத்தின் ஏற்பாட்டில் திரையிடப்பட்ட இச் சிறப்பு காட்சிக்கு நான் வந்தேன்.
உண்மையிலேயே மலேசிய விஜய் ரசிகர்களை கண்டு நான் ஆடிப் போனேன்.
காலை 6 மணிக்கு எல்லாம் ரசிகர்கள் இங்கு திரண்டு தளபதியை கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக கோட் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஆர்வமாக உள்ளது.
அவர்களைப் போன்று நானும் இத் திரைப்படத்தை பார்க்கும் ஆர்வத்தில் உள்ளேன்.
இந்த கோட் திரைப்படத்தில் மலேசிய கலைஞர் இர்பானும் நடித்துள்ளார். தளபதி விஜய்யுடன் இணைந்து நடிப்பது என்பது மிகப் பெரிய சாதனையாகும்.
ஆகையால் தளபதியை போன்று ரசிகர்கள் நமது கலைஞர் இர்பானை கொண்டாட வேண்டும்.
அவருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஜி கூறினார்.
