
🔊To listen to this news in Tamil, Please select the text.
அனைத்து துறைகளிலும் ரஷ்யாவுடன் ஒத்துழைக்கும் நிலைக்கு மலேசியா உறுதி பூண்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
மலேசியா – ரஷ்யா உறவுகளின் உண்மையான ஆற்றல் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
இதன் அடிப்படையில் அனைத்துத் துறைகளிலும் அந்நாட்டுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி காணப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடன் அனைத்து பகுதிகளிலும் சிறந்த உறவுகள், தனிப்பட்ட, அரசாங்க ஒத்துழைப்பு வலுப்பெறும் என நான் நிச்சயமாக நம்புகிறேன்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடனான இருதரப்பு சந்திப்பை நடத்திய பிரதமர் இவ்வாறு கூறினார்.
இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கு சென்ற பிரதமர், ரஷ்ய அதிபரை சந்தித்தார்.
மேலும் அவர் நாளை ஒன்பதாவது கிழக்கு பொருளாதார மன்றத்தின் முழு அமர்வில் உரை நிகழ்த்த உள்ளார்.



