27.3 C
Kuala Lumpur
Tuesday, June 30, 2026

Vetri

இந்திய வம்சாவளி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்!

🔥 Views : 12
👁 Reading Now : 46

🔊To listen to this news in Tamil, Please select the text.

கோபியோ அனைத்துலக மாநாட்டில் இந்திய வம்சாவளி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

இம்மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு தலைவர் ரவிந்திரன் அர்ஜுன் தெரிவித்தார்.

15ஆவது கோபியோ அனைத்துலக மாநாடு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் 15 நாடுகளில் இருந்து பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில் இளையோர் மாநாடும் நடைபெறவுள்ளது.

வேற்றுமையில் ஒற்றுமை உலகளாவிய இந்தியர்களின் கட்டமைப்பை வலுப்படுத்தல் என்ற கருப்பொருளுடன் இந்த மாநாடு நடைபெறுகிறது.

உலகளாவில நிலையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களில் எதிரோக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

குறிப்பாக ஓஐசி அட்டை, மொழி, கலை, கலாச்சாரம் பாதுகாப்பது உட்பட பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கபடவுள்ளது என்று ரவீந்திரன் கூறினார்.

இந்நிலையில் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சின் கீழ் உள்ள செராஸ் அனைத்துலக இளைஞர் மையத்தில் ஆற்றல்மிக்க இளைஞர் மாநாடு நடைபெறுகிறது.

இம்மாநாட்டிற்கு நுழைவு கட்டணம் இல்லை. குறிப்பாக தங்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

அதே நேரத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் ஆசிய கல்லூரியில் இந்திய வம்சாவளி தலைமை இயக்குநர்களுக்கான மாபெரும் கருத்தரங்கு நடைபெறுகிறது.

ஆகவே இம்மாநாடுகளில் மலேசியர்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles