
🔊To listen to this news in Tamil, Please select the text.
தீபாவளி சந்தை கடைகளுக்கான வாடகையை குறைப்பதுடன் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லோகபாலா மோகன் இதனை கூறினார். தீபாவளியை முன்னிட்டு தலைநகரை சுற்றி சந்தைகள் அமைக்கப்படுவது வழக்கம். நமது இந்திய வணிகர்கள் இச்சந்தைகளில் உள்ள கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்வார்கள். இந்நிலையில் இவ்வாண்டு கடைகளுக்கான வாடகை மிகவும் அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது.அதே வேளையில் 1 மாதத்திற்கு வழங்கப்படும் இக்கடைகள் இவ்வாண்டு 2 வாரங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இது வணிகர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.வியாபாரிகள் அனைவரும் 1 மாதத்திற்கான பொருட்களை வாங்கி வைத்து காத்துக் கொண்டிருக்கும் வேளையில் இப்புதிய விதிகள் அவர்களுக்கு பெரும் பாதிப்பை தந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து வணிகர்களிடம் இருந்து பல புகார்களை மைபிபிபி கட்சி பெற்றுள்ளது. ஆகவே இந்த விவகாரத்திற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக தீபாவளி காலத்தில் இந்திய வர்த்தகர்களை அவர்கள் சோதிக்கக் கூடாது என்று டத்தோ லோகாபாலா வலியுறுத்தினார்.



