28 C
Kuala Lumpur
Monday, August 10, 2026

Vetri

ஊடகவியலாளர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி!

🔥 Views : 18
👁 Reading Now : 26
To listen this news in Tamil, Please click play button

நாளை புதன்கிழமை முதல் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பதிந்து கொண்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
தடுப்பூசி பெறுவதற்கான தேதியை பத்திரிகையாளர்கள் இன்று தொடங்கி பெறுவார்கள் என்று அவர் சொன்னார்.
நாளை புதன்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் வேளையில் சில பத்திரிகையாளர்கள் இன்று முதல் அதற்கான தேதியை பெறுவர் என்றார் அவர்.
எனினும், தடுப்பூசியைப் பெறும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனக் கூறிய அவர், அதனைத் திரட்டும் பணியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles