
நோய்த்தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஜொகூர் மாநில தாமான் மேவா யோங் பெங் ஜசெக கிளை உதவி வருகிறது.
தாமான் மேவா வட்டாரத்தில் வசதி குறைந்த மக்களை தேடிச்சென்று அதன் தலைவர்கள் உதவி வருகிறார்கள்.
அந்த வகையில் இவ்வாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜொகூர் மாநில இம்பியன் சமூகநல இலாகா அமைப்பின் உதவியோடு நாங்கள் ஏழை மக்களுக்கு உதவி வருகிறோம் என்று கிளைத் தலைவர் சண்முகவேல் தெரிவித்தார்.
கிளை செயலாளர் ஜோனா, பொருளாளர் தவமணி, இளைஞர் பகுதித் தலைவர் கார்த்திக், ஷா ஜசெக கிளைத் தலைவர் ஆனந்தன் ஆகியோரும் ஏழை மக்களுக்கு உதவி வருகிறார்கள் என்று அவர் சொன்னார்.



