
ரவாங் புக்கிட் பெருந்தோங் தோட்ட பாட்டாளிகளுக்காக கட்டப்பட்ட வீடுகள் இன்று பாழடைந்து கிடக்கின்றன.
100க்கும் மேற்பட்ட தோட்டப் பாட்டாளிகள் தங்களுக்கு தங்களுக்கு செந்த வீடுகள் எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் பெரும் வேதனையோடு உள்ளனர்.

புக்கிட் பெருந்தோங் தோட்டம் விற்பனைக்கு வந்த போது அங்கு வேலை செய்த தோட்டப் பாட்டாளிகளுக்காக தரை வீடுகள் கட்டப்பட்டன.
இந்த வீட்டுக்கான முன் பணத்தை பாட்டாளிகள் செலுத்தியுள்ளனர். மேலும் வீட்டுக்காக வங்கியில் வாங்கிய கடனையும் செலுத்தி வருகின்றனர்.
இதில் பாதிக்கு மேற்பட்ட பட்டாளிகள் வங்கி கடனை செலுத்தி விட்டனர்.
ஆண்டுகள் பல கடந்து விட்டன .

ஆனால் எங்களுக்கு சொன்னபடி வீடுகள் கட்டி கொடுக்கப்படவில்லை என்று இந்தத் தோட்டத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் வேதனையுடன் தெரிவித்தார். எங்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் இன்று காடு மண்டி கிடக்கின்றன. மேம்பாட்டு நிறுவனம் இது திட்டத்தை கைவிட்டுவிட்டது என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் இதில் தலையிட்டு எங்களுக்குரிய வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
பிஎஸ்எம் கட்சியின் செயலாளர் சிவராஜன் எங்களுக்கு எல்லா உதவிகளும் செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட தோட்டப் பாட்டாளிகளுக்கு வீடுகள் கிடைக்க அவர் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார் என்று பெரியசாமி குறிப்பிட்டார்.



