
தடுப்புக்காவல் மரணம் மற்றும் அதிகார அத்துமீறலை ஒழிக்கவும் (எடிக்ட்) என்ற மனித உரிமைகள் குழு, கொரோனர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அந்த நீதிமன்றங்கள் சம்பந்தப்பட்ட புதியச் சட்டங்களை இயற்றவும் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தது.
எந்தவொரு அரசியல் கூறுகளும் பாகுபாடும் இல்லாமல், நீதிமன்றங்கள் மூலமாக தவிர, தடுப்புக்காவல் மரண வழக்குகளுக்கு நீதி கிடைக்க வேறு வழியில்லை என்று எடிக்ட் வலியுறுத்துகிறது.
கொரோனர் நீதிமன்றத்தின் பங்கு வலுப்படுத்தப்பட வேண்டும், கொரோனர் நீதிமன்றச் சட்டம் இயற்றப்பட வேண்டும். அதே நேரத்தில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் உள்ள விதிகளுக்கும் இணங்க வேண்டும்.
சரியான மற்றும் முறையான செயல்முறைகளைக் கடைபிடித்ததால், குடும்பத்திற்கு ஆதரவாக பல நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்துள்ளதை வரலாறு நிரூபித்துள்ளது.
ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பில், எந்தவொரு அதிருப்தியும் இருந்தால் உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படலாம்,” என்று அது இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.



