25.3 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

மக்கள் அன்பிணைப்பு இயக்கத்தின் சார்பில் MAJLIS AMAL JARIAH DEEPAVALI 2024 நிகழ்ச்சி!

மக்கள் அன்பிணைப்பு இயக்கத்தின் சார்பில் MAJLIS AMAL JARIAH DEEPAVALI 2024 நிகழ்ச்சி எதிர்வரும் அக்டோபர் 27ஆம் தேதி, இரவு 7.45 மணிக்கு காஜாங்கில் உள்ள DEWAN ORANG RAMAI, BUKIT MEWAH வில் மிக சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் ஹீ லோ சியான் கலந்து கொள்கிறார். மேலும் நடப்பு பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்ஸான் ஜொஹான் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

120 பேர் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பயனடையவுள்ளனர். மூத்த குடிமக்களில் 30 பேருக்கு தீபாவளி பெருநாளுக்குப் புத்தாடைகள் வாங்க அவர்களுக்கு முறையே பற்றுச்சீட்டு வழங்கப்படும். ஒரு பற்றுச்சீட்டு தலா 100 ரிங்கிட்டாகும். ஆக, 30 பேர் மூத்த குடிமக்களுக்கு இந்த பற்றுச்சீட்டுகளை வழங்கவிருக்கிறோம் என்று PJKR இயக்கத்தின் உதவி தலைவர் குமணன் சீரங்கன் கூறினார்.

அதுமட்டுமல்லாமல், 30 குடும்பங்களுக்கு தீபாவளி பெருநாளை முன்னிட்டு உணவுக்கூடை வழங்கப்படவிருக்கிறது. இந்த உணவுக்கூடையில் சமையலுக்குத் தேவையான மசாலா பொருட்கள் வழங்கப்படுவதுடன் அவர்கள் பெருநாளன்று மகிழ்ச்சியுடன் சமைத்து உண்பதற்காக இந்த உதவி வழங்கப்படுகிறது என்று அவர் கருத்துரைத்தார்.

மேலும், 30 ஆதரவற்ற குழந்தைகளுக்கு 100 ரிங்கிட் மதிப்புள்ள பற்றுச்சீட்டு வழங்கப்படவிருக்கிறது. இறுதியாக, 30 பேர் பார்வை குறைபாடுயுடையோர் தரப்புக்கு 100 ரிங்கிட் மதிப்புள்ள பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளது. இந்த நான்கு பிரிவைச் சேர்ந்த தரப்பினருக்கு தாங்கள் உதவி செய்யவுள்ளதாக குமணன் ஶ்ரீரங்கன் கூறினார். அவர்களுக்கு உணவு வழங்கி, ஆதரவு வழங்கவிருக்கிறோம்.

மேலும், அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறப்போகும் நிகழ்ச்சியில் சிலம்பம், பரதநாட்டியம் ஆகிய படைப்புகள் படைக்கப்படும் வேளையில் மூன்று பார்வைக்குறையுடையோர் நிகழ்ச்சி ஒன்றைப் படைக்கவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு MMOIL SDN.BHD & ASIA ENERGY SDN.BHD ஆகிய இரு நிறுவனங்கள் முதன்மை ஆதரவாளராக இருக்கின்றனர். இந்த MAJLIS AMAL JARIAH DEEPAVALI 2024 நிகழ்ச்சிக்கு ஏதேனும் நிறுவனங்கள் ஆதரவு வழங்க விரும்பினால் அவர்கள் தாராளமாக வரவேற்கப்படுகின்றனர் என்று PJKR இயக்கத்தின் செயலாளர் மார்கரட் சூசை தெரிவித்தார்

PJKR இயக்கத்தின் மூலமாக MMOIL SDN.BHD & ASIA ENERGY SDN.BHD இரு நிறுவனங்களும் பல்வேறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. நம்மவர்களிடையே ஒற்றுமை அவசியம். ஒற்றுமையாக செயல்பட்டால் இந்த நிகழ்ச்சியை வெற்றியடைய செய்ய முடியும். மேல் விபரங்களுக்கு PERTUBUHAN JARINGAN KASIH RAKYAT – PJKR இன் சமூக ஊடகங்களின் வாயிலாக தொடர்புகொள்ளலாம் என்று PJKR இயக்கத்தின் உறுப்பினரும் MMOIL SDN.BHD நிறுவனத்தின் இயக்குநரான ஜோ கார்த்திக் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles