27.5 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளிக்காக அமைக்கப்பட்ட சில கடைகள் அகற்றப்பட்டதால் பெரும் சலசலப்பு!

🔥 Views : 10
👁 Reading Now : 25

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் வியாபாரம் செய்ய தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன.

தீபாவளிக்காக அமைக்கப்பட்ட சில கடைகளை டிபிகேஎல் இன்று அகற்றிய போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இன்று கால பத்து மணிக்கு மேல் அங்கு வந்த கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அமலாக்க பிரிவின் அதிகாரிகள் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா வந்தனர்.

போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் தீபாவளி கலை விழா நடத்த மேடையை அமைக்கும் பொருட்டு இந்த கடைகள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

கடைகளை அமைத்து இரண்டு வாரமாக இவர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கடைகள் அகற்றப்பட்டதால் அதன் உரிமையாளர்கள் பொங்கி எழுந்து கடுமையான ஆட்சேபம் தெரிவித்தனர்.

கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக எங்கள் கடைகளை அகற்றி வயிற்றில் அடிப்பது ஏன் என்று அவர்கள் கேள்வியை எழுப்பினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles