27.5 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

சமூக நல்லிணக்கத்தை வளர்க்க தேசிய ஒற்றுமை மிக அவசியம்!

🔥 Views : 10
👁 Reading Now : 25

சமூக நல்லிணக்கம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை வளர்க்க தேசிய ஒற்றுமை மிக அவசியம் என தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.
ஒருவருக்கொருவர் மதித்தல் மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்த இது மிக அவசியம் என்றார் அவர்.
நேற்று இங்கு டிஎச்எஸ் ஹோஸ்பிலட்டி நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
ஒரு ஒற்றுமையான சமூகம் சவால்களை எளிதில் எதிர் கொள்ள முடியும். இதன் வழி நாட்டை வழுப்படுத்த முடியும் என்றார் அவர்.
நாட்டில் ஒற்றுமையை வளர்க்க ருக்கூன் நெகாராவின் கோட்பாடுகள் உறுதுணையாக இருந்து வருகின்றன.
பல இன சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வை வளர்ப்பதில் இந்த கோட்பாடுகள் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
மலேசியாவில் தேசிய மற்றும் சமூக ஒற்றுமை வளர்க்க தேசிய ஒற்றுமை துறை அமைச்சு முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு நல்லிணக்க சமூகத்தை உறுதி செய்ய, சர்ச்சைகள மற்றும் ஒற்றுமை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் தேசிய ஒற்றுமை துறை அமைச்சு முக்கிய பங்காற்றி வருவதாக அவர் சொன்னார்.
மலேசியாவில் விருந்தோம்பல் தொழில்துறையில் ஒற்றுமையை வளர்க்க டிஎச்எஸ் நிறுவனம் பல திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தொழிலாளர்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்த இந்த நிறுவனம் பல திட்டங்களை வகுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles