31.4 C
Kuala Lumpur
Thursday, August 6, 2026

Vetri

முன்னாள் ராணுவ வீரர்கள் விருந்து உபசரிப்பு

🔥 Views : 32
👁 Reading Now : 55

அண்மையில் முன்னாள் ராணுவ வீரர்களின் விருந்து உபசரிப்பு மிக சிறப்பாக மஸ்ஜித் இந்தியாவில் அமைந்துள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் மண்டபத்தின் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு சிறப்பு வருகையாக மனிதநேய மாமனி ரத்னவள்ளி அம்மையார் வருகை தந்து ஆதரவு கரம் நீட்டினார். அவர் பேசும்போது நம் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தவர்கள் தான் ராணுவ வீரர்கள். அவர்களை நாம் என்றும் மறக்கக்கூடாது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நான் பெருமைப்படுகிறேன் என்றார். சண்முகம் முனியாண்டி அனைவரையும் வரவேற்று பேசினார். அவர் பேசும்போது வருடா வருடம் சிறப்பாக இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெறும் என்றார். இந்த நிகழ்வில் ரத்தினவள்ளி அம்மையார் எங்களுக்கு ஆதரவு கொடுத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோல இந்த விருந்து நிகழ்ச்சிக்கு நல்ல உள்ளங்கள் ஆதரவு கொடுத்துள்ளனர் அவர்களுக்கும் நன்றி என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles