25.3 C
Kuala Lumpur
Tuesday, June 30, 2026

Vetri

95 வருடக் கால சேவையைக் கொண்டாடிய BOH தேநீர்

🔥 Views : 13
👁 Reading Now : 22

கோலாலம்பூர், அக். 28-
மலேசியாவின் முன்னணி தேயிலை உற்பத்தியான BOH தேநீர், அதன் 95 ஆண்டு சேவையை பெருமையுடன் கொண்டாடியது.
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் “நாளைக்கான தேநீர் காய்ச்சு” என்ற கருப்பொருளுடன் இவ்வாண்டின் ஆண்டுவிழா கலை கட்டியது.
அக்டோபர் 19, 20 ஆம் தேதிகளில் பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள சூட்ஸ் சென்ரலில் தரம், மற்றும் நிலைத்தன்மை. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத் தீபாவளி சிறப்பு சாலைக் காட்சி நடைபெற்றது.
இரண்டு நாள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குடும்ப உறவுகளை BOH தேநீருடன் ஒன்றிணைக்கும் வகையில் பல உற்சாகமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு மசாலா டீ உட்பட பலவிதமான தேநீர்களைச் சுவைக்கவும் வாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைமுறைகளை இணைக்கும் காலமற்ற மரபுகள். மசாலா டீயின் சூடான, BOHவின் மசாலா சுவைகள் இருக்கும்.
BOHவின் பிரபலமான தொலைக்காட்சி விளம்பரங்களில் அதிகம் காட்டப்படும் குடும்ப மதிப்புகளைப் போலவே, தேநீர் ஒரு நினைவூட்டலாக எப்பொழுதும் செயல்படும்.
நிலைத்தன்மைக்கான BOHவின் செயல்திறனுக்கு இணங்க, இந்த நிகழ்ச்சியில் மறுசுழற்சி செய்யக்கூடிய தேநீர் நெகிழி கோப்பைகளில் செய்த மயில் உருவத்தின் நிறுவலும் இடம்பெற்றது.
சுற்றுச்சூழலைப் பாதிகாப்பதில் BOH தனது பங்கை வகித்து வருகிறது என்பதை பறைசாற்றும் வகையில் இந்த உருவ பொம்மை அமைந்ததோடு பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.


இரண்டு நாட்களிலும் பல விளையாடுகளி நடைபெற்றதோடு பலர் இந்தப் போட்டிகளில்கலந்து கொண்டு பிரத்தியேக BOH வணிகப் பொருட்களை வென்றனர். 95 ஆண்டு காலமாக வாடிக்கையாளர்களின் நன்பகத்தன்மையைப் பெற்ற BOH இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் வழி உறவை வழுபடுத்திக் கொண்டது எனலாம்.
இந்தக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, BOH தேநீர் தனது தீபாவளி கொண்டாட்டங்களை கிள்ளான் லிட்டில் இந்தியாவில் அக்டோபர் 26, 27 ஆம் தேதிகளில் கொண்டாடியது.
பண்டிகைகள், குடும்ப நிகழ்ச்சிகளில் ஒரு அங்கமாக BOH தேநீரையும் ஒரு அங்கமாகக் கொண்டு அதனை சுவைத்து மகிழ்ந்து குடும்பத்துடன் கொண்டாடுவோம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles