27.5 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவிற்கு காவல்துறை அதிகாரிகள் வருகை!

🔥 Views : 10
👁 Reading Now : 24

தீபாவளிக்காக பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளை பார்வையிடுவதற்காக காவல்துறை அதிகாரிகள் இன்று வருகை தந்தனர். அதே போல் இன்று நடைபெற இருக்கும் கலை நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணிகளையும் மேற்பார்வையிட்டனர். கடைகளுக்கு எந்த வித தொந்தரவும் இல்லாமல் மேடைகள் அமைக்கப்படுவதை அவர்கள் உறுதி செய்தனர். கடந்த சில நாட்களாக கலை நிகழ்ச்சிக்காக பிரிக் ஃபீல் வட்டாரத்தில் மேடை அமைக்கப்படுவது பெரும் பேசு பொருளானது. அவ்வகையில் இன்று காவல்துறை அதிகாரிகள் நேரில் வருகை தந்து நிலைமை சீராக உள்ளதை கண்காணித்து அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக இருக்கும் படி கேட்டுக் கொண்டனர். வருகை தந்த அதிகாரிகளுக்கு காரசாரம் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் ஸ்ரீபாண்டி உணவாக உரிமையாளர்கள் சிறப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles