
அண்மையில் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு சம்பவத்தில் விஜயலட்சுமி என்ற இந்திய மாது புதையுண்டார். இந்தச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல நாள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினரால் இதுவரை அவரது உடலை கண்டுபிடிக்க முடியவே இல்லை. இதனால் மிகுந்த வேதனையடைந்த அவரத்து குடும்பத்தாருக்கு கொடைநெஞ்சர் செந்தமிழ் செல்வர் ஓம் தியாகராஜன் பத்தாயிரம் வெள்ளி உதவி நிதி வழங்கினார். அங்கு கருத்து தெரிவித்த ஓம் தியாகராஜன் இச்சம்பவம் வரும் பெரும் துயரச் சம்பவம். இந்த தீபாவளி சமயத்தில் தாயை இழந்து வாடும் அவரது மகனுக்கு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இச்சம்பவம் ஒரு தகுந்த பாடமாக இருக்க வேண்டும். இனிமேல் இவ்வாறான அசந்பாவிதங்கள் இடம்பெறாதிருக்க அனைத்து தரப்பினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்த உதவி நிதி வழங்கும் நிகழ்வு தமிழ்மலர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தொழிலதிபர் பி கே சாமி மனிதநேயமாமணி ரத்தினவள்ளி அம்மையார் மேலும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
