24.7 C
Kuala Lumpur
Monday, February 16, 2026

Vetri

இறுதி அவதாரம்;தீபாவளி நந்நாளில் புதுமைக் காணொளி வெளியீடு!

மலேசியக் கலை உலகில் புதிய அவதாரம் எடுத்துள்ளார் கலைஞர் Clipshotநேஷ்.

இறுதி அவதாரம் என்னும் பெயரில் பதுமையான, எழுச்சியான பாடலுடன் காணொளிக் காட்சியை வெளியிட்டுள்ள Clipshotநேஷ், அடிப்படையில் தகவல்-தொழில்நுட்பக் கல்வி பட்டதாரி ஆவார். ஒரு நிறுவனத்தில் தன்னுடைய கல்வி சார்ந்த தொழிலை மேற்கொண்டுவரும் இவர், இசையிலும் கலையிலும் கொண்ட ஆர்வத்தின் காரணமாக இந்தக் காணொளிக் காட்சியை அரும்பாடுபட்டு உருவாக்கி இருக்கிறார். இந்த ஆண்டு தீபாவளி தினமான அக்டோபர் 31-ஆம் நாள் கலைஞர் Clipshotநேஷின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

IBP Studios நிறுவனரும் இந்தக் காணொளியின் வெளியீட்டாளருமான Coruz Hooks மற்றும்
மைக்கேல் கிரிஸ் எழுதி இசையமைத்துப் பாடியுள்ள ‘நல்லவனும் உனக்குள்ளே-கெட்டவனும் உனக்குள்ளே’ என்னும் பாடலுக்கு கலைஞர் நேஷும் நடித்துள்ளார். கடந்த கால நினைவுகளுடன் காதல்-துரோகம்-பழிதீர்த்தல் போன்றவற்றை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தும் இப்பாடல், இதே நவம்பர் மாதத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ஒரு குறும்படத்தில் இடம்பெறுவது இன்னொரு சிறப்பு.

YouTube சமூக ஊடகத்தில் பிரபலமாகத் திகழும் IBP Studios-வைச் சேர்ந்தவருமான Clipshot நேஷ், இந்த ‘இறுதி அவதாரம்’ காணொளியை ஹர்விஷுடன் இணைந்து இயக்கியும் இருக்கிறார்.

சமூகத்தில் சொந்த நலனுக்காக பெண்கள் பயன்படுத்தப்படுவதையும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்கள் இதில் சிக்கவைக்கப் படுவதையும் இந்தக் காணொளி, தெளிவாகக் காட்சிப் படுத்துகிறது.

கலையுலக நண்பர்கள், அன்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் Clioshotநேஷின் இந்தக் கன்னி முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இதன் வெளியீட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles