
செய்தி / படங்கள் : எம்.முருகன்
நேற்று டேவான் பூசாட் கமுனிட்டி செத்தியவங்சா மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் மலேசிய உணவு உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் மற்றும் சிறப்பு வருகையாக தத்தோ சாகுல் சாகுல் அமீத் எ டி ராஜா மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பிரஸ்மாவின் தேசிய தலைவர் டத்தோ ஜகவர் அலி பேசும் போது உணவகங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் உணவகங்கள் கடைகளும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆள் பற்றாக்குறை இன்னும் இருந்து வருகிறது அதை பலமுறை அரசாங்கத்திற்கு சொல்லிவிட்டோம். இதற்கு ஒரு நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எரிபொருளில் விலையேற்றம் நம் நம் உணவு தொழிலுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அதனால் யாரும் விலைகளை ஏற்றக்கூடாது. வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் உணவுகளை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அரசாங்கம் வகுத்து வரும் வழி காட்டுதல்களை நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். தமது பிள்ளைகளையும் ஒவ்வொருவரும் உணவு தொழிலுக்கு கொண்டு வந்து பழக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நமக்குள் போட்டி இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் இந்த தொழிலை நடத்தி வெற்றி காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கட்டாயமாக அப்ரூவல் இல்லாமல் அன்னிய தொழில்களை வைத்துக் கொள்ளக் கூடாது. இந்தக் கூட்டத்தில் ஒன்றை கூற விரும்புகிறேன் ஒருமுறை தத்தோரேனா ராமலிங்கம் கூறும் போது உணவு தொழிலை சிறப்பாக நடத்தலாம் ஆனால் முக்கியமாக ஒரு கட்டடம் இருக்க வேண்டும் என்று அப்பொழுது ஆலோசனை கூறினார் அதன்படி ஒரு கட்டடத்தை வாங்கி இன்று சிறப்பாக பிரஸ்மா வெற்றியோடு நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும் அவர் கூறுகையில் வரும் காலங்களில் இந்திய முஸ்லீம் கடைகளில் சிகரெட் விற்பதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் மேலும் இப்பொழுது நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அந்நிய தொழிலாளர்களை 18ம் 18 முதல் 45 வரை தான் உடைய வயசு வயசு உள்ளவர்களை எடுக்க முடியும் இதை அரசாங்கத்திடம் முறையாக பேசி வருகிறோம் 50 வயதுக்கு மேல் அணிய தொழிலாளர்களை எடுக்கலாம் என்று கோரிக்கையை முன் வைப்போம் என்றார்



