
குற்றச்செயல் தொடர்பில் கைது செய்யப்பட்டு கெடா மாநிலத்திற்கு பிசிஓ (pco) கைதியாக அனுப்பி வைக்கப்பட்ட என் சகோதரர் யுவராஜ் கனகராஜ் (வயது 38) மரணம் அடைந்திருக்கிறார்.
இவரின் மரணம் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும் என அவரின் சகோதரர் தனபாலன் இன்று செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கடந்த 21-1-2021ஆம் தேதி என் சகோதரர் கனகராஜா கெடா மாநிலத்துக்கு பிசிஒ கைதியாக அனுப்பிவைக்கப்பட்டார். அவர் தங்கி இருந்த இடத்தில் மற்றொரு ஆடவரும் பிசிஒ கைதியாக தங்கியிருக்கிறார். கடந்த 12-2–20 21ஆம் தேதி அந்த ஆடவர் என் சகோதரரை தாக்கி இருக்கிறார்.
அதன் பின்னர் அந்த ஆடவர் எட்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் 16-2-20 21 ஆம் தேதி அந்த ஆடவர் வீட்டை உடைத்து இரும்புத் தடியால் என் தம்பியை தாக்கியிருக்கிறார். இதனால் அவர் உயிரிழந்தார்.
ஏன் தம்பியை தாக்கிய அவரின் காலில் வளையம் பொருத்தப்பட்டுள்ளது. அவர் எட்டு கிலோமீட்டர் தூரம் தாண்டி சென்றால் அது போலீஸ்காரருக்கு தெரியவரும்.
அப்படி இருக்கையில் அவர் எப்படி வந்து என் தம்பிய தாக்கி மரணம் விளைவிக்க முடியும் என்று தனபாலன் கேள்வி எழுப்பினார்.
போலீஸாரின் அலட்சியமே இதற்கு காரணம் என்று குறிப்பிட்ட தனபாலன் இது தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
