
🔊To listen to this news in Tamil, Please select the text.
இளைஞர்கள் வியாபாரத் துறையில் வெற்றி நடைபோடுவது மகிழ்ச்சியளிக்கிறது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
காரசாரத்தின் 18ஆவது கிளையை வெற்றிகரமாக இன்று பங்சாரில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தேன்.
அண்மைய காலமாக இந்தியர்கள் அதிக அளவில் வியாபாரத் துறையில் ஈடுபடுவதை பெரிதும் வரவேற்கிறேன்.
பங்சார் காரசாரத்தில் வித்தியாசமாக claypot மட்டுமல்லாது வாழை இலை உணவும் பரிமாறப்படுகிறது.
இன்று மதியம் 1 தொடங்கி நாளை மதியம் 1 வரை 24 மணி நேரத்திற்கு இடைவிடாமல் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு Claypot உணவு இலவசமாக வழங்கப்படும்.

மலேசிய கிண்ணஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் இந்த முயற்சியைப் பாராட்டுகிறேன்.
நாம் எது செய்தாலும் சிறப்பாகச் செய்ய வேண்டும், வித்தியாசமாகச் செய்ய வேண்டும் எனும் நோக்கில் இன்றைய இளைஞர்கள் வியாபாரத் துறையில் வெற்றி நடைபோடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறினார்.



