
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிப்பாங் நகராண்மை கழக தலைவர் டத்தோ அப்துல் ஹமீட் ஹுசைன், புதிய கிள்ளான் மேயராக டிசம்பர் 2 ஆம் தேதி முதல் தனது கடமைகளை ஆற்றுவார்.
நவம்பர் 20 அன்று ஓய்வு பெற்ற முன்னாள் டத்தின் படுகா நோரைனி ரோஸ்லானுக்குப் பதிலாக அப்துல் ஹமீட் நியமிக்கப் பட்டுள்ளதாகக் கிள்ளான் துணை மேயர் முகமட் ஜாரி அஃபெண்டி முகமட் ஆரிஃப் கூறினார்
“கிள்ளான் மாநகராட்சி ஊழியர்கள் சார்பாக, முன்னாள் மேயரின் சேவையின் போது அவர் செய்த பல சேவைகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
இன்று காலை அப்துல் ஹமீட் அவர்களுக்கு ஆணை சமர்ப்பிக்கும் விழா சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம் அவர்களால் அலுவலகத்தில் நடத்தி வைக்கப்பட்டது.
முன்னர், உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சில், கோலா சிலாங்கூர் மாவட்ட கவுன்சில், பெட்டாலிங் ஜெயா மற்றும் கிள்ளான் மாநகராட்சி நகர்ப்புற திட்டமிடல் துறையின் தலைவராக நோரைனி பணியாற்றியுள்ளார்.



