
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாடு முழுவதும் 6 மாநிலங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கனமழையால் 37,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) அது பற்றி நாடாளுமன்றத்தில் விவரம் தந்தார்.
கிளந்தான் (Kelantan), திரங்கானு (Terengganu), கெடா (Kedah), பெர்லிஸ் (Perlis), ஜொகூர் (Johor), பேராக் (Perak) ஆகிய மாநிலங்களில் 322 தற்காலிக முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
1732793281-0/Untitled-design-(9)1732793281-0.jpg)
கிளந்தான் மாநிலம் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 30,000 பேர் பாதிக்கப்பட்டதாக பிரதமர் அன்வார் சொன்னார்.
சில மாநிலங்களில் நாளை வரை வெள்ளம் நீடிக்கும் என்று மெட் மலேசியா கணித்துள்ளது.



