
கோலாலம்பூர் டிச 16-
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் பிறந்த நாள் விழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
ம இகா நேதாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தம்பதியர் கேக் வெட்டி மகிழ்ந்தனர்.

ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் அவர்கள் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

ம இகாவின் தேசிய உதவித் தலைவர்களான டான்ஸ்ரீ நெல்சன், டத்தோ அசோஜன், தலைமை செயலாளர் டத்தோ ஆனந்தன், நிர்வாக செயலாளர் டத்தோ டாக்டர் குமரராஜா ஆகியோரும் மாலைகள் அணிவித்து சிறப்பு செய்தனர்.
ம இகா மாநிலத் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்களும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு மாலைகள் அணிவித்தனர்.

ம இகா தலைவர்கள் மற்றும் தொகுதி தலைவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிறந்த நாள் விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
